Thursday, 26 September 2013

விண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிட வேண்டுமா?




விண்டோஸ் எக்ஸ்பி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் 8, 2014க்குப் பின்னர் இருக்காது. இந்த செய்தி, பல எக்ஸ்பி விசுவாசிகளுக்கு எரிச்சலைத் தந்துளது. பலர் மாற விரும்பினாலும், உடனே செயல்படாமல், நாட்களைக் கடத்திக் கொண்டுள்ளனர். பலர், மைக்ரோசாப்ட் புதிய கம்ப்யூட்டர்களையும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களையும் நம்மை வாங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி, பணம் சம்பாதிக்கத் திட்ட மிடுகிறது என்ற குற்றச்சாட்டினையும் வைக்கின்றனர்.இது உண்மை அல்ல என்பது இதுவரை விண்டோஸ் சிஸ்டத்தின் பல பதிப்புகளுக்கு நேர்ந்ததைக் கவனித்தால் தெரியவரும்.



மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இது எக்ஸ்பி சிஸ்டத்திற்கு மட்டுமல்ல. அனைத்து சிஸ்டங்களும், இது போல்தான் முடக்கப்பட்டன என்று கூறுகிறது. விண்டோஸ் 95, விண்டோஸ் 98 மற்றும் விண்டோஸ் மி ஆகியவற்றின் வாழ்நாளும் இதே போல முடிவுக்கு வந்தன. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் விஸ்டாவின் இயக்க வாழ்வு, வரும் ஏப்ரல் 11,2017ல் முடிவடையும். விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பாதுகாப்பு முறை ஜனவரி 14,2020 ஆம் ஆண்டில் முடிந்துவிடும்.


விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பொறுத்தவரை, அதன் வாழ்நாள் சப்போர்ட் பலமுறை நீட்டிக்கப்பட்டது. மற்ற சிஸ்டங்களை நடத்தியது போல, எக்ஸ்பியையும் நடத்த முற்பட்டிருந்தால், சில ஆண்டுகளுக்கு முன்பே, இதற்கான சப்போர்ட் வாபஸ் பெற்றிருக்கப்பட வேண்டும். உற்றுக் கவனித்தால், ஓர் ஆச்சரியமான உண்மை வெளிப்படும். விண்டோஸ் எக்ஸ்பி 2001 ஆம் ஆண்டு வெளியானது. 2010ல் எக்ஸ்பி பதிந்து இயக்கப்பட்டகம்ப்யூட்டர்கள் மிகப் பழமையாக இயங்கின. ஆனால், எக்ஸ்பி வெளியாகி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த, விண்டோஸ் விஸ்டா, 2011 வரையே பாதுகாப்பில் இருந்தது.



விண்டோஸ் எக்ஸ்பி வெளியாகி 13 வயதாகி விட்டது. இளஞ்சிறுவர்கள் மாதிரி, இன்றைய (டிஜிட்டல்) உலகை, எக்ஸ்பியால் தாக்குப் பிடிக்க இயலவில்லை. மிகப் பெரிய அளவில், பல மாற்றங்களுடன் சர்வீஸ் பேக் 3 வந்தாலும், எக்ஸ்பியால், புதிய டிஜிட்டல் மாற்றத்திற்கு ஈடு கொடுக்க இயலவில்லை என்பதே உண்மை. விண்டோஸ் விஸ்டாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில பாதுகாப்பு வழிகளைக் கூட எக்ஸ்பியால், பின்பற்ற இயலவில்லை. தற்போது ஹார்ட்வேர் பிரிவில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்களுடன் இணைந்து செயல்பட எக்ஸ்பி சிஸ்டத்தால் இயலவில்லை.




மைக்ரோசாப்ட் மட்டுமின்றி, இதற்கென புரோகிராம்களை உருவாக்கியுள்ள சில தர்ட் பார்ட்டி நிறுவனங்களும், தொடர்ந்து எக்ஸ்பியில் அவை இயங்குகையில் பாதுகாப்பு அளிக்க இயலவில்லை. ஒவ்வொரு விண்டோஸ் சிஸ்டம் புதிய பதிப்பு வெளியாகும் போதும், இந்த நிறுவனங்கள், அதிக நேரம் மற்றும் பணம் செலவழித்து தங்கள் புரோகிராம்களை அப்டேட் செய்கின்றனர். அந்நிலையில், எக்ஸ்பிக்கு வெளியான புரோகிராம்களையும் தொடர்ந்து பராமரிப்பது வீணான செயல் என்று எண்ணுகின்றனர்.



எக்ஸ்பி தொடர்வது இன்டர்நெட்டையும் பாதிக்கிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6, 7 மற்றும் 8 பதிப்புகள் மட்டுமே, எக்ஸ்பியுடன் இணைந்து செயல்படுகின்றன. இந்த பிரவுசர்கள் எல்லாம், மற்றவற்றைக் காட்டிலும் மிகப் பின் தங்கியவை ஆகும். இதனால், தற்போதைய பிரவுசர்களுக்காக எனத் தனியே கூடுதலாக, வெப்சைட்கள் தயார் செய்திட வேண்டியுள்ளது.




ஆனால்,எக்ஸ்பி சிஸ்டத்தை விடுத்து, விண்டோஸ் 2007 அல்லது விண்டோஸ் 8 க்கு மாற இருப்பவர்களுக்குக் கூடுதல் செலவு ஆகலாம். கம்ப்யூட்டர் மட்டுமின்றி, துணை சாதனங்களையும் மாற்ற வேண்டியதிருக்கும். ஆனால், வேறு வழியில்லை.



இன்னொரு சிக்கலும் உள்ளது. விண்டோஸ் 7 ஓரளவிற்கு, விண்டோஸ் எக்ஸ்பியின் தன்மையைக் கொண்டு இயங்குகிறது. இதனால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறியவர்கள், மிக அதிக அளவில் புதுமையைச் சந்திக்கவில்லை. மாற்றத்திற்குத் தங்களை எளிதில் பழகிக் கொண்டனர்.




ஆனால், விண்டோஸ் 8க்கு மாறுபவர்களுக்கு எல்லாமே மிகப் புதியதொரு அனுபவத்தினைத் தருவதாக அமைந்துள்ளது. இவர்கள், சற்று நேரம் ஒதுக்கிச் சிலவற்றைப் புதியதாகக் கற்றே ஆக வேண்டும். புதியதாகக் கம்ப்யூட்டர் வாங்குபவர்களுக்கு விண்டோஸ் 8 சிஸ்டம் பதிந்து கொடுக்கப்படுகிறது. அவர்கள் இதனை இயக்கிப் பார்க்கும் போது, புதிய மாற்றங்களையும், அவை நம்மிடம் எதிர்பார்க்கும் திறனையும் உணரலாம். அடுத்து விண்டோஸ் 8.1 வருகையில், அதில் சில பழைய விண்டோஸ் அம்சங்களைப் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மைக்ரோசாப்ட், விண்டோஸ் 8.1 பயன்படுத்துவது பற்றிய குறிப்பு களையும் சேர்க்கலாம்.


எனவே, விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருப்பவர்கள், அடுத்து எப்போது அதனை முடித்து வேறு விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறலாம் என்பதனைத் திட்டமிட வேண்டும்.

தலை முடி பிரச்னைகளுக்கு 60 நிமிடத்தில் தீர்வு!

Solution to the problem of hair in 60 minutes


முகம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் தலை முடி தான் ஒருவரின் அழகை முழுமை ஆக்குகிறது. தலைமுடி உதிர்தல், இளநரை, பேன், பொடுகு, புழு வெட்டு, என பலவிதமான பிரச்னைகள் தலை முடியில் வரும். வயது வித்தியாசம் இல்லாமல் , ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் இதுபோன்ற தலை முடி பிரச்னைகள் வரும். உணவு பழக்கவழக்கம், சுற்றுப்புற சூழ்நிலைகள், பராமரிப்பு இல்லாதது தான் இதற்கு காரணம். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்கிறேன், ஆனாலும் எனக்கு முடி உதிர்கிறது, பேன், பொடுகு இருக்கிறது என்பதும், இருபது வயது தான் ஆகிறது முடி நரைத்து விட்டது என்பதும் பலரின் தினசரி புலம்பல்களில் ஒன்று.

இது எங்களை பொறுத்தவரை ஒரு மணி நேரத்தில் சரி செய்யகூடியது தான் என்கிறார் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள விக்டோரியா சீக்ரெட் பெண்கள் அழகு நிலையத்தின் நிர்வாக இயக்குனர் ஷர்மி.

இது குறித்து ஷர்மி கூறியதாவது: முன்பு பயப்பட வேண்டிய நிலையில் இருந்த தலை முடி பிரச்னைகள் தற்போது சாதரண விஷயமாகி விட்டது. கடந்த 22 வருடங்களாக அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மூலம் பலன் அடைந்தவர்கள் பல ஆயிரம் பேர். இந்த சிகிச்சையின் ரகசியம் எங்களது எண்ணெய் தான். ஆயுர்வேத முறைப்படி தகுந்த மூலிகைகள் மூலம் மிக சரியான பக்குவத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள எண்ணெய் மற்றும் ஹேர் பேக் மூலம் தலை முடி பிரச்னைகளுக்கு நிரந்தரமாக தீர்வு ஏற்படுகிறது.

நரையை மறைப்பதற்காக கெமிக்கல் கலந்த ஹேர் டை பயன்படுத்துவதால் சிலருக்கு முகத்தில் கருப்பு திட்டுக்கள், அலர்ஜி ஏற்படும். எனவே தலை முடி பிரச்னைகளை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். எந்த நிலையில் தலை முடி சார்ந்த பிரச்னைகள் இருந்தாலும் கவலைப்பட தேவை இல்லை. ஒரு முறை அதுவும் ஒரு மணி நேர ஹேர் பேக்கேஜ் மூலம் எத்தனை ஆண்டுகள் ஆன தலைமுடி பிரச்னைகளையும் சரி செய்யலாம்.

சிகிச்சைக்கு வருபவர்களிடம், முதலில் என்ன காரணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் அதற்கேற்ற ஹேர் மசாஜ் செய்யப்படும். பேன், பொடுகு உள்ளவர்களுக்கு அதற்கேற்ற மூலிகை பேக் போடப்பட்டு சிறிது நேரம் ஊற வைக்கப்பட்டு பின்னர் கழுவி விடப்படும். இதை தொடர்ந்து வீட்டில் தினமும் பயன்படுத்த ஹேர் ஆயில், வாரம் ஒரு முறை பயன்படுத்த மூலிகை பவுடர் பேக், ஷாம்பு வழங்கப்படும்.

வேகன் ஐஸ் கிரீம்!

 In a blender, add the frozen banana, the peanut butter, the cocoa powder and the vanilla essence and blend till smooth and all the ingredients have mixed well.




என்னென்ன தேவை?


மிகவும் கனியாத வாழைப்பழங்கள்-2
வேர்க்கடலை வெண்ணெய்-1 1/2மேஜைக்கரண்டி
கோகோ தூள்-3/4 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ்-3 சொட்டு
முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு



எப்படி செய்வது?



ஒரு ஜாடியில் வாழைப்பழம், வெண்ணெய், கோகோதூள், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து மிக்ஸியில் போட்டு மென்மையாக ஐஸ்கிரிம் போல அடிக்கவும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு பருப்பு வகைகளை சேர்த்து அலகரித்து பரிமாறவும்.

காலிங்கராயன் கால்வாய் வளைந்து செல்வது ஏன்?




காவிரியாற்றின் கிளை நதிகள் பவானி, நொய்யல் ஆகியன. பவானியையும், நொய்யலையும் இணைப்பது காலிங்கராயன் கால்வாய். இந்த கால்வாயை வெட்டியதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. அதே சமயத்தில் இந்த கால்வாய் வெட்டி கொண்டு செல்லப்பட்டதில் உள்ள தொழில் நுட்பம் பலர் அறியாத விஷயம்.


பவானி அணை கடல் மட்டத்தில் இருந்து 534 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412 அடி உயரம் கொண்டது. பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.



ஈரோடு அருகே வெள்ளோடு அடுத்த கனகபுரத்தில் சாத்தை குலத்தில் பிறந்தவன் லிங்கையன். பாண்டியன் வீரபாண்டிய மாறவர்மானால் காலிங்கராயன் என அழைக்கப்பட்டான். 12 ஆண்டுகள் தவமிருந்து அணையை கட்டியதால் கலிங்கராயன் என அழைக்கப்பட்டான். கலிங்கம் என்றால் அணை என்று பொருள். அதனால் கலிங்கராயன் என அழைக்கப்பட்டு பின்னாளில் காலிங்கராயன் என மருவியதாக வரலாறு. வாய்க்கால் நேராக கொண்டு சென்றால் அதிகமான வயலுக்கு பாயாமல் நேராக விரைந்து ஓடி நொய்யலில் விழுந்து விடும்.



எனவே நீர் தேங்கி நின்று வயலுக்கு பாய்ந்து நிலம் வளப்படுத்துவதற்காகவும், நீரின் வேகத்தை குறைத்து கரைக்கு வெள்ளத்தினால் ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்காகவும், மேட்டுபாங்கான இடத்திலேயே தொடர்ந்து செல்கிறது. பாய்ந்தோடும் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்த காலிங்கராயன் கையாண்ட யுக்தி இப்போதைய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.



பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.

நோக்கியா Lumia 1020 அக்டோபர் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம்!






நோக்கியா நிறுவனம் அதன் புதிய நோக்கியா Lumia 1020 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நோக்கியா Lumia 1020 அக்டோபர் 11-ம் தேதி முதல் நாடு முழுவதும் சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்கும். நோக்கியா Lumia 1020 ஒரு 4.5-அங்குல டிஸ்ப்ளே கொண்டுள்ளது.


பிளாக் வெள்ளை மற்றும் மஞ்சள் போன்ற மூன்று வண்ணங்களில் புதிய Lumia 1020  கிடைக்கும்.  மேலும், இரண்டு அக்சசரி பாகங்கள் கொண்ட Lumia 1020  இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா கேமரா கிரிப் ரூ.7,500  மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஷெல் ரூ.3,200 விலையில் கிடைக்கும்.



நோக்கியா Lumia 1020 அம்சங்கள்:



768x1280 தீர்மானம் கொண்ட 4.5 அங்குல AMOLED ClearBlack டிஸ்ப்ளே


1.5GHz dual-core குவால்காம் ஸ்னாப்ட்ராகன் S4 processor


2GB RAM


உள்ளக சேமிப்பு 32GB


41-மெகாபிக்சல் PureView பின்புற கேமரா


1.2-மெகாபிக்சல் வைட் ஆங்கிள் முன் கேமரா


விண்டோஸ் போன் 8


2,000 Mah பேட்டரி


Nokia introduced the new Nokia Lumia 1020 smartphone

பிளாக்பெர்ரி Z10 இந்தியாவில் திருவிழா கால சலுகையாக விலை குறைவு!





பிளாக்பெர்ரி நிறுவனம் வரையறுக்கப்பட்ட திருவிழா கால சலுகையாக இந்தியாவில் பிளாக்பெர்ரி Z10 ரூ.29.990 ஆக விலை குறைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த நிறுவனம் சலுகை காலத்தை வெளிப்படுத்தப்படவில்லை.


பிளாக்பெர்ரி நிறுவனம் சமீபத்தில் லேட்டஸ்ட் phablet மற்றும் பிளாக்பெர்ரி Z30 வெளியிடப்பட்டது.



பிளாக்பெர்ரி Z10 அம்சங்கள்:



4.2 அங்குல காட்சி


768 x 1280 பிக்சல்கள்,


1.5GHz டூயல் கோர் ப்ராசஸர்


ரேம் 2GB


16 GB inbuilt சேமிப்பு


எடை 137.5 கிராம்


8 மெகாபிக்சல் பின்புற கேமரா


2 மெகாபிக்சல் முன் கேமரா


GSM


64 GB வரை விரிவாக்கக்கூடிய microSD


Wi-Fi, 802.11


குவால்காம் MSM8960 ஸ்னாப்ட்ராகன்


Li-Ion 1800 Mah பேட்டரி கொண்டுள்ளது. 


தங்க நிறத்தில் சாம்சங் கேலக்ஸி S4 அறிமுகம்!




சாம்சங் நிறுவனம் அதிரடியாக தங்க நிறத்தில் சாம்சங் கேலக்ஸி S4 அறிமுகப்படுத்தியுள்ளது. தங்க பிரவுன் அல்லது தங்க பிங்க் - தங்க கேலக்ஸி S4s இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். பிங்க் மற்றும் ப்ரவுன் போன்களில் தங்க நிறத்தில் பின் தகடு கொண்டுள்ளது.



சாம்சங் விலை அல்லது கிடைக்கக்கூடிய தகவல்களை வெளியிடவில்லை. அவை தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தையில் மட்டும் கிடைக்கும். இது மத்திய கிழக்கு சந்தைகளில் விற்பனை செய்ய இலக்காக உள்ளது போல் தெரிகின்றது.



ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தர் - சுற்றுலாத்தலங்கள்!



ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தர்
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரின் இன்னொரு ஆச்சரியம் 'ஜந்தர்மந்தர்' என்னும் பாரம்பரிய வானியல் கோளரங்கம். ஜெய்ப்பூர் அரண்மனையையொட்டி அமைந்துள்ளது.
 
 இது கி.பி1727-1734ஆம் ஆண்டுகளுக்கு இடையே இரண்டாம் ஜெய்சிங் மகாராஜா என்ற மன்னரால் அமைக்கப்பட்டது.வானவியல் கருவிகள் இங்குள்ளன.ஜந்தர் மந்தரின் உண்மையான பெயர் 'யந்த்ரா மந்த்ரா'. இதில் 'யந்த்ரா' என்றால் கருவிகள். 'மந்ந்ரா' என்றால் சூத்திரம். அதாவது கருவிகளின் துணையுடன் வானவியல் கணக்கீடுகளை அறிந்து கொள்ளுதல் என்பது இதன் பொருளாகும். இதே போல ஜந்தர்மந்தர்கள் டெல்லி, காசி, உஜ்ஜைனி, மதுரா போன்ற இடங்களில் இருந்தாலும் ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தரே மிகப்பெரியது.

 இங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களும் கருவிகளும் நேரத்தை அறிந்து கொள்ளவும்,கிரகணங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும், கோள்களின் சாய்மானங்களை அறியவும் என வானவியல் தொடர்பான கணக்கீடுகளுக்கு பயன்பட்டு வந்துள்ளன.இங்குள்ள 'சாம்ராட் இயந்திரம்'என்றழைக்கப்படும் சூரியக் கடிகாரம் நேரத்தை மிகத் துல்லியமாக அறிவதற்கு பயன்பட்டுள்ளது. இதன் உயரம் 90அடி. இது உலகின் மிகப்பெரிய சூரியக்கடிகாரமாக கருதப்படுகிறது. இதன் நிழலை அடிப்படையாகக் கொண்டு நேரத்தை கணக்கிட்டு வந்துள்ளனர்.

 இங்குள்ள வானியல் கணக்கீட்டுக் கருவிகளை பளிங்குக் கற்களால் கட்டியிருப்பது இன்னொரு சிறப்பு.உள்ளுர் உழவர்கள் பருவநிலையை தெரிந்து கொள்ள இன்றளவும் இந்தச் சூரியக்கடிகாரம் உதவி வருகிறது. சிறப்புக்குரிய ஜந்தர்மந்தர் 1948ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.யுனெஸ்கோவின் உலக பண்பாட்டுச் சின்னங்களின் பட்டியலில் 2010ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

 ஜெய்ப்பூரின் வரலாற்றில் பல சுவாரஸ்யங்கள் உண்டு. கி.பி.1875ஆம் ஆண்டில் விக்டோரியா மகாராணியின் மகன் இந்த நகருக்கு வருகைதந்ததையொட்டி நகரின் முக்கிய வீதிகளில் சிவப்பு வண்ணங்களைப் பூசி அழகுபடுத்தினார் ஜெய்ப்பூர் மகாராஜா சவாய் ராம்சிங். அன்று முதல் ஜெய்ப்பூர் 'பிங்க் சிட்டி' என்றழைக்கப்படுகிறது. ஜெய்ப்பூர் அரண்மனையின் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் ஜெய்ப்பூரின் ஆச்சரியம் மற்றும் அதிசயங்களில் ஒன்றாக ஜந்தர்மந்திர் என்றழைக்கப்படும் வானியல் கோளரங்கமும் திகழ்ந்து வருகிறது.
 
எப்படிப் போகலாம்?
 
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து ஜெய்ப்பூருக்கு நல்ல சாலை வசதிகள் உள்ளன. ஜெய்ப்பூரில் பெரிய ரயில்நிலையம் உள்ளது. டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருந்து ஜெய்ப்பூருக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஜெய்ப்பூர் நகரில் இருந்து சுமார் 13கி.மீ தொலைவிலேயே விமான நிலையம் உள்ளது.

கொசுக்களை வாசனையால் கவர்ந்திழுத்து அழிக்கும் கருவி: பிளஸ் 1 மாணவியர் கண்டுபிடிப்பு!


மனித உடலில் இருந்து வெளியேறும் வாசனையை, திரவம் மூலம் உருவாக்கி, கொசுக்களை கவர்ந்திழுத்து அழிக்கும் புதிய கருவியை, தனியார் பள்ளி மாணவியர் கண்டுபிடித்துள்ளனர்.


சென்னை, பெரம்பூர், கல்கி ரங்கநாதன் மான்ட்போர்டு மெட்ரிக் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் ஒப்பிலியா, தேன்மொழி, அபிராமி ஆகிய மூன்று மாணவியர், மிக மிக குறைந்த செலவில் கொசுவை ஒழிக்கும் கருவியை கண்டுபிடித்து உள்ளனர்.இந்த புதிய கருவியின் செயல்பாடு குறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு, அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

sep 26 - tyec mosqute

 


அப்போது மாணவியர் கூறியதாவது:மனித உடலில் இருந்து வெளியேறும் வெப்பம், கார்பன் டை ஆக்சைடு, வியர்வையில் இருந்து வெளிப்படும் வாசனை மூலம் கொசுக்கள் மனிதர்களை அடையாளம் கண்டுபிடித்து, கடிக்கின்றன. அதன் அடிப்படையில் தான் இந்த கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.


*செவ்வக வடிவில் பெட்டி போன்று காணப்படும் இந்த கருவியில், இரண்டு பக்கங்களிலும் கம்பி வலைகள் உள்ளன. அந்த வலைகளில் 20 முதல் 40 வாட் வரை மின்சாரம் பாய்ச்சப்படும்.


*பெட்டியின் கீழ்ப்பக்கத்தில் மூன்று திரவங்களை கொண்ட கண்ணாடி குடுவை பொருத்தப்பட்டுள்ளது.


*இரண்டு துளைகள் கொண்ட ரப்பர் அடைப்பான் மூலம் அந்த குடுவை மூடப்பட்டுள்ளது.



*ஒரு துளை வழியாக காற்றை குடுவைக்குள் செலுத்தும் போது, திரவம், கம்பி வலை வழியாக வாயுவாக வெளியேறும்.


*இந்த வாயு, மனித உடலில் வியர்வை வாசனை போன்று இருக்கும். அந்த வாசனையால், கவரப்படும் கொசுக்கள், கம்பி வலையை நோக்கி ஈர்க்கப்படும். மின்சாரம் தாக்கி அழியும்.


இந்த கருவியை தயாரிக்க, 1,750 ரூபாய் செலவாகும். திரவ கலவை 50 மி.லி., அளவு, 30 ரூபாய் ஆகும். இந்த கலவை இரண்டு மாதங்களுக்கு பயன்படும்.


கருவிக்கு ஐந்து ஆண்டுகள் வரை உத்தரவாதம் தரலாம். 


கருவியில் இரவு நேர மின்விளக்கும் பொருத்திக் கொள்ளலாம்.தற்போது கடைகளில் விற்கப்படும் கொசு ஒழிப்பு மருந்துகள் மனிதர்களுக்கு நுரையீரல் பாதிப்பு உட்பட, பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இந்த திரவ கலவை அதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தாது. 

அதற்கு உரிய சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.இவ்வாறு மாணவியர் விளக்கம் அளித்தனர்.


கருவியின் செயல்பாடுகளை கேட்டறிந்த மேயர் சைதை துரைசாமி, கருவி தயாரிப்பு செலவை குறைக்க மாணவியருக்கு அறிவுரை வழங்கினார்.
இதுகுறித்து மாணவியர் கூறுகையில், ‘தற்போது இந்த கருவி, பிளைவுட் மூலம் செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டால் செலவு இன்னும் குறையும்’ என்றனர்.

பேஸ்புக் ஷார்ட் கட் கீகள்!


இன்றைய உலகில் அதிகளவில் பயன்படுத்தப்படுவது பேஸ்புக் மற்றும் யூடியூப் தான்.


இவற்றிற்கான ஷார்ட் கட் கீகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


பேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீகள்


Alt+1 - Facebook Home Page 

Alt+2 - Your Profile Page 


Alt+3 – Friend’s Request 


Alt+4 – Inbox (Message) 


Alt+5 – Notifications 


Alt+6 - My Account 


Alt+7 – Privacy Settings 


Alt+8 – Facebook Fans Page 


Alt+9 - Terms and Conditions 


Alt+0 – Help 



யூடியூப் ஷார்ட்கட் கீகள்


Spacebar – Start/Stop The Video

Left Arrow – Rewind The Video 


Right Arrow – Previous Video 


Up Arrow - Increase Sound 


Down Arrow – Descres Sound 


F key – Full Screen 


மருதனும்...பாறாங்கல்லும் (நீதிக்கதை)



 
 
ஒரு ஊரை ஒரு அரசன் ஆண்டு வந்தான். அந்த ஊர் மக்கள் அனைவரும் சுயநலவாதிகளாகவே இருந்தனர்.யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல் ...

 
தங்கள் நலத்தையே எண்ணி,,அதனால் பிறர் துன்பம் அடைந்தாலும் கவலைப்படாமல் வாழ்ந்து வந்தனர்.

 
அவர்களை திருத்த என்ன செய்யலாம் என மன்னன் நீண்ட நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

 
அந்த ஊருக்குள் வரும் முக்கியமான சாலை ஒன்றிற்கு குறுக்கே ஒரு பெரிய பாறாங்கல்லை போட்டு வைத்தான்.

 
மறுநாள் மக்கள் ...அவ்வழியில் நடக்கையில் ..அந்த கல்லின் மீது ஏறியே தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.ஒருவருக்காவது வழியில் தடையாயிருக்கும்

 
அந்தக் கல்லை நீக்கி பின்னால் வருபவர்களுக்கு உதவ வேண்டும் என்று தோன்றவில்லை.

 
அந்த ஊரில் இருந்த மருதன் என்ற ஒருவன் மட்டும் இந்த கல்லை எடுத்துப் போட்டால் ....மக்கள் கஷ்டப் படாமல் நடப்பார்கள் என நினைத்து..அவன் மிகவும்

 
கஷ்டப்பட்டு ...யாருமே உதவிக்கு வராத நிலையில் ...அதை எடுத்து ஒரு ஒரத்தில் போட்டான்.

 
கல் இருந்த இடத்திற்கு கீழே மன்னன் பல தங்கக்காசுகளை வைத்து ..இதை அகற்றியவனுக்கு கடவுளின் பரிசு என்று எழுதியிருந்தான்.

 
மருதனுக்கு அக்காசுகள் கிடைத்ததும் மக்கள் மனம் திருந்த ஆரம்பித்தனர்.பிறருக்கு நன்மை செய்தால் கடவுள் நமக்கு உதவுவார் என்ற எண்ணம் ஏற்பட

அனைவரும் ஒருவருக்கொருவர் உதவ ஆரம்பித்தனர்.


பிறருக்கு உதவி செய்பவனுக்கு கடவுளின் உதவியும் கருணையும் கிடைக்கும்.
 

Flexible டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 3 அக்டோபர் மாதம் அறிமுகம்!




Flexible டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 3 ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்புடன்(limited edition) அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.


சாம்சங் கேலக்ஸி நோட் 3 Flexible டிஸ்ப்ளே அம்சங்கள்



5.7-இன்ச் முழு HD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வருகிறது,
 

168 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது.
 

1.9GHz Octa-core செயலி புரோஸசர்
 

3GB
 

800 குவால்காம் ஸ்னாப்ட்ராகன்
 

13-மெகாபிக்சல் பின்புற கேமரா
 

2-மெகாபிக்சல் ஸ்நாப்பர் முன் கேமரா
 

3,200 Mah பேட்டரி மூலம் இயங்கும்.
 

ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்கும்.


4K தீர்மானம் வீடியோக்களை பதிவு செய்ய திறன் உள்ள LED ஃபிளாஷ் கொண்ட 13-மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. வீடியோ அழைப்புக்கு 2-மெகாபிக்சல் ஸ்நாப்பர் முன் கேமரா உள்ளது.



சாம்சங் கேலக்ஸி நோட் 3,  ஒரு microSD அட்டை வழியாக 64GB வரை விரிவாக்க கூடியது. ROM 16GB, 32GB மற்றும் 64GB சேமிப்பு வகைகளில் கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி நோட் 3 Flexible டிஸ்ப்ளே ரூ.49.900 விலையில் இந்தியாவில் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.



திசு சிகிச்சையில் நெற்றியில் மூக்கு!





 சீனாவை சேர்ந்த ஜியோலியன்(22) என்பவருக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு அவர் சரியான சிகிச்சை எடுக்காததால், தொற்று காரணமாக குருத்தெலும்பு முற்றிலும் சேதமடைந்து மூக்கு உருக்குலைந்தது. அதை டாக்டர்களால் சரிசெய்ய முடியவில்லை.


இவருக்கு தோல் திசு வளர்ப்பு சிகிச்சை முறையில் புதிய மூக்கு உருவாக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக இடுப்பெலுப்பில் இருந்து எடுக்கப்பட்ட குறுத்தெலும்பை பயன்படுத்தி, ஜியோலியனின் நெற்றி பகுதியில் புதிய மூக்கு வளர்க்கப்பட்டது. இது தற்போது முழு வளர்ச்சியடைந்துள்ளது. இது விரைவில் அகற்றப்பட்டு ஜியோலியனுக்கு, பொருத்தப்படவுள்ளது.


இந்திய விஞ்ஞானி புது கண்டுபிடிப்பு விண்ணில் கருங்குழி மர்மம் நீங்குமா?




 விண்ணில் ‘இறந்த’ நட்சத்திரங்களால் உருவாகும் கருங்குழிகள் பற்றி நீடிக்கும் மர்மத்தை உடைக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் பெங்களூர் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.   அண்டவெளியில் பூமி உட்பட பல கோள்கள் உள்ளன. பல லட்சம் சூரியன்கள், நிலாக்கள், நட்சத்திரங்கள் என்று பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருக்கின்றன. இந்த நட்சத்திரங்கள் எல்லாம் அதன் அணுசக்தியை இழக்கும் போது ‘இறந்த’ நட்சத்திரங்களாகி விடுகின்றன. விண்ணின் பால்வெளி மண்டலத்தில் இப்படி சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் பரவி கிடக்கும் நிலையில், இந்த ‘இறந்த’ நட்சத்திரங்கள் எல்லாம் கருங்குழியாகி விடுகின்றன. இந்த கருங்குழி, பல சூரியன்களின் ஒளியை தன்னுள் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. ஆல்பர்ட் ஈன்ஸ்டின் புவிஈர்ப்பு கோட்பாட்டுக்கும் இந்த கருங்குழிகளுக்கும் ஒரு வகையில் இயற்பியல் ரீதியாக ஒரு ஒற்றுமை இருக்கிறது  என்று இந்தியா உட்பட பல நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.


கருங்குழி பற்றி முதன்  முதலில் உண்மைகளை கண்டுபிடித்து சொன்னவரே, நம் நாட்டு தமிழ் விஞ்ஞானி சந்திரசேகர் தான். அதற்காகவே அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.   இறந்த நட்சத்திரம் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, கருங்குழியாகவோ ஆகி விடும் என்று முதன் முதலில் கண்டுபிடித்தவர் இவர். இதனால் இந்த கண்டுபிடிப்புக்கு சந்திரசேகர் லிமிட் என்றும் பெயர் வைக்கப்பட்டது.   இந்த நிலையில், கருங்குழி பற்றிய மர்மம் நீடித்து வருகிறது. இந்த குழிகள் சிறியது தானா, அதன் ஆழம் என்ன, அதன் ஈர்ப்பு சக்தி  என்ன? ஒலி, ஒளியை தன்னுள் விழுங்கும் போது நடப்பது  என்ன? பல சூரியன்கள் ஒளியை கொண்டது  என்பது சரியா? என்பது பற்றி எல்லாம் மர்மம் நீடிக்கிறது.   சாதாரண கண்களுக்கு இந்த கருங்குழி தெரியாது. டெலஸ்கோப் மூலமும் கண்டுபிடிப்பது சிரமம் தான். நுணுக்கமாக ஆராய்ந்தால் பால்வெளியில் ஏதோ கரும்புள்ளி போல தான் தெரியுமாம். பெங்களூர் நகரில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ள பானிப்ரத்தா முகோபாத்யை இந்த கருங்குழி ஆய்வில் புதிய உண்மையை கண்டுபிடித்துள்ளார்.  



 இரண்டு ஆண்டாக மேற்கொண்ட ஆய்வில், அண்டவெளியில் உருவாகும் கருங்குழி தன்னை சுற்றிய ஒலி, ஒளி மற்றும் நட்சத்திர துகள்கள் எல்லாவற்றையும் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் சக்தி படைத்தது. இது மட்டுமின்றி, இதை சுற்றிய சுழற்சி, நட்சத்திர எரி துகள்கள் போன்ற பொருட்கள் ஆகியவற்றை வைத்து  குழியின் ஆழம், சுழற்சி வேகத்தை கணக்கிடலாம். மேலும், குழியை சுற்றிய சுழற்சி வலை மற்றும் பொருட்கள் தனியாக இயங்குவதில்லை. ஒன்றுக்கொன்று பிணைந்தது என்பது தான் பானிப்ரத்தாவின் கண்டுபிடிப்பு.  இந்த கண்டுபிடிப்பு மூலம்,  கருங்குழி பற்றிய ஆராய்ச்சிகளில் புதிய தெளிவு கிடைத்துள்ளதாக அமெரிக்க, பிரிட்டன் இயற்பியல் விஞ்ஞானிகள் பாராட்டியுள்ளனர். ‘நட்சத்திரங்கள் எப்படி நொறுங்கி அழிகின்றன, கருங்குழியாகின்றன என்பதற்கு இந்த ஆராய்ச்சி உதவும்’ என்று விஞ்ஞானி பானிப்ரத்தாவுக்கு உதவியாக இருந்த ஆராய்ச்சி மாணவி இந்திராணி பானர்ஜி கூறினார்.



அதென்ன கருங்குழி?


* பூமி, சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் சேர்ந்தது தான் இந்த அண்டவெளி. 


* விண்ணில் பரந்து கிடக்கும் பால்வெளியில் உள்ளது தான் சூரியன், நிலா, நட்சத்திரங்கள்.


* இந்த நட்சத்திரங்கள் தன்னுள் உள்ள அணு எரிசக்தியை இழக்கும் போது ‘இறந்ததாக’ கருதப்படுகின்றன.
 

* அப்படி இறந்த பின் அவை என்னவாகின்றன என்பது மர்மமாக இருந்தது.
 

* அவை, கருங்குழியாகிவிடுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.
 

* கருங்குழி ஈர்ப்பு சக்தி கொண்டது. தன்னை சுற்றிய பொருட்களை ஈர்த்துக்கொள்ளும்.
 

* சுழலும் அணு துகள்கள், பொருட்கள் வேகம் பற்றிய ஆய்வு தொடர்ந்து மர்மமானது.
 

* கருங்குழி மர்ம முடிச்சுகள் தொடர்ந்து அவிழ்ந்த வண்ணம் உள்ளது.

குரங்கும்..முதலையும் (நீதிக்கதைகள் )




ஒரு ஊருக்கு வெளியே ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம்.அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு ஒன்று உயிர் வாழ்ந்து வந்தது.


ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து'நாவல் பழம் மிகவும் ருசியானதா?' எனக் கேட்டது.


குரங்கும்.."முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்" என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது.முதலையும் பழத்தை ருசித்து விட்டு..குரங்கிடம் மேலும் சில பழங்களை தன் மனைவிக்கு வாங்கிச் சென்றது.


முதலையின் மனைவி அப்பழங்களை சாப்பிட்டு விட்டு முதலையிடம்..'இப்பழங்கள் இவ்வளவு இனிக்கிறதே..இதே பழத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த குரங்கின் குடல் எவ்வளவு இனிக்கும்! அது எனக்கு வேண்டும்." என்றது.


முதலையும் குரங்கிடம் வந்து நயவஞ்சகமாக..'குரங்கே!..நாவல் பழம் தந்த உனக்கு என் மனைவி விருந்திட விரும்புகிறாள்..வா.." என்றதும்.குரங்கும் மகிழ்ந்து..முதலையின் முதுகில் உட்கார்ந்து ஆற்றில்..முதலையின் இருப்பிடம் செல்லத் தொடங்கியது.
 

பாதி தூரம் வந்ததும்..இனி குரங்கால் நீரில் தனித்து ஓட முடியாது என முதலை..'மட குரங்கே!..உண்மையில் விருந்து உனக்கல்ல. என் மனைவிக்குத் தான்.அவள்தான் உன் குடலை சாப்பிட விரும்புகிறாள்" என்றது.


சற்று நேரம் யோசித்த குரங்கு..'முதலையே அதை முதலிலேயே சொல்லக் கூடாதா..நான் என் குடலை கழட்டி மரத்தில் அல்லவா வைத்திருக்கிறேன்..திரும்ப மரத்திற்கு என்னைக் கொண்டு போ. குடலை எடுத்து மாட்டிக்கொண்டு வருகிறேன்..' என்றது.


முதலையும் யோசிக்காது..குரங்கு உண்மை சொல்வதாக எண்ணிக் கொண்டு அதை திரும்ப மரத்திற்கு அழைத்து வந்தது


வேகமாக மரத்தில் ஏறிய குரங்கு..'முட்டாள் முதலையே. குடலை உடலிலிருந்து கழட்டி மாட்ட முடியுமா? உன்னை நம்பிய என்னை ஏமாற்றிவிட்டாயே..நியாயமா? என்று கேட்டது.


முதலையும் ஏமாந்து திரும்பியது.


நாமும் யாரையும் உடன் நம்பக்கூடாது. அவர்கள் நல்லவர்களா..கெட்டவர்களா என நட்பு கொள்ளுமுன் பார்க்க வேண்டும்.


ஆபத்துக் காலத்தில் நம் மூளையை உபயோகித்து..ஆபத்திலிருந்து விடுபட வேண்டும்.